விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு நடந்த வளைகாப்பு! குவிந்த பிரபலங்கள்!

First Published | Aug 22, 2024, 7:04 PM IST

பிரபல சின்னத்திரை நடிகை நேகா கவுடா கடந்த ஜனவரி மாதம், கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததை தொடர்ந்து... தற்போது அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது இதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
 

Serial Heroine Neha Gowda:

திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகைகளை விட, சீரியல் நடிகைகள் ரசிகர்களின் மனதை மிக விரைவாக கவர்ந்து விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் எதார்த்தமான நடிப்பை அவர்கள் வெளிப்படுத்துவதாலும், தினந்தோறும் இவர்கள் நடிக்கும் சீரியல்கள் சின்னத்திரை மூலம் வீடு தேடி வந்து இல்லத்தரசிகளை கவர்வதாலும் தான்.

Serial to Cinema

ஒரு சிலர் நடிகைகள் சின்னத்திரையில் பிரபலமான பின்னர், வெள்ளி திரைக்கு சென்று தங்களின் கனவை அடைகிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற வாணி போஜன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், போன்ற நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக உள்ளனர்.

கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட ரஜினிகாந்த்; நடிகை சுமித்ரா கூறிய அதிர்ச்சி சம்பவம்!

Tap to resize

Vijay TV Serial Actress Neha gowda

இந்நிலையில் சின்னத்திரை மூலம் ரசிகர்களை வசீகரித்த நடிகை தான் நேகா கவுடா, கல்யாண பரிசு, காயத்ரி, குணா, போன்ற சீரியலில் நடித்துள்ள நேகா கவுடா... விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாவம் கணேசன்' சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Neha Gowda with Husband

இவர் சந்தன் கவுடா என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜனவரி மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது.

த.வெ.க கட்சி பாடலை கேட்டு கண் கலங்கி அழுத புஸ்ஸி ஆனந்த்! தேற்றிய தளபதி - போட்டோஸ்!

Neha Gowda Baby Shower

அவ்வப்போது தன்னுடைய பிரக்னன்சி போட்டோ ஷூட்டை வெளியிட்டு வந்த நேகா கவுடாவுக்கு... அவரின் கணவர் பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

Neha Gowda Baby Shower Photos

நிறை மாத கர்ப்பமாக இருக்கும் நடிகை நேகா கவுடாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, இவர்களை வாழ்த்தி உள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வாழ்த்துக்கள் விஜய் அண்ணா; முதல் ஆளாக முந்திக்கொண்டு வாழ்த்து கூறிய பிரபலம்!

Latest Videos

click me!