இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தை அறிமுகம் செய்து வைத்த தளபதி விஜய், இன்று (August 22) பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில், த.வெ.க கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அது மட்டுமல்லாமல் கட்சிக்கான பாடலும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, தமன் இப்பாடலுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.