
நடிகை சுமித்ரா ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த திரைப்படங்களில் ஒன்று 'புவனா ஒரு கேள்விக்குறி'. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும், அவருக்கு மறு ஜென்மம் என்றும் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புவனா ஒரு கேள்வி குறி'. இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவகுமார், சுமித்ரா, ஜெயா, மீரா, ஒய் ஜி மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, போன்ற பல நடித்திருந்தனர். நாகராஜ் (சிவகுமார்) மற்றும் சம்பத் (ரஜினிகாந்த்) ஆகிய இரண்டு நண்பர்கள் தெருவோரத்தில் துணிக்கடை வைத்து நாகராஜ் எப்படி கெட்டவராகவும், சம்பத் எப்படி நல்லவராகவும் மாறுகிறார். என வித்தியாசமான கதைகளத்தில் வெளியான திரைப்படம் தான் 'புவனா ஒரு கேள்விக்குறி' இந்த படம் சுமித்ராவை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது.
த.வெ.க கட்சி பாடலை கேட்டு கண் கலங்கி அழுத புஸ்ஸி ஆனந்த்! தேற்றிய தளபதி - போட்டோஸ்!
விபத்தில் இறந்த காதலியின் நினைவால், மனமுடைந்து இருக்கும் சம்பத் துணிக்கடையில் தன்னுடைய பங்கைநாகராஜுக்கே கொடுத்துவிட்டு அவருக்கே உதவியாளராக இருக்க முடிவு செய்கிறார். தொழில் ரீதியாக மெட்ராசுக்கு செல்லும் நாகராஜ் மற்றும் சம்பத்... முத்து என்பவரை சந்திக்க நேர்கிறது. அவர் சூட்கேஸில் கத்த கத்தையாக பணம் வைத்திருந்த நிலையில், அந்த பணத்தை அப்படியே விட்டுவிட்டு மாரடைப்பில் இறந்து போகிறார் முத்து. முத்துவின் தங்கையாக வரும் புவனா தொலைந்து போன பணத்தை எடுத்தவர் நாகராஜ் தான் என தீர்மானிக்கிறார். இதை அறிந்த நாகராஜ், புவனாவை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றுகிறார்.
விதியின் வசத்தால் நண்பனால் கைவிடப்பட்ட புவனாவை சம்பத் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. கடைசி வரை சம்பத்தும் புவனாவும் ஊருக்கு மட்டுமே கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் நிஜத்தில் தனித்தனியாக வாழ்கின்றனர். அதே நேரம் நாகராஜ் சில கெட்ட பழக்கங்களால் தன்னுடைய ஆண்மையை இழந்து, தன்னுடைய குழந்தையை தனக்கே தத்து கொடுக்கும் படி கேட்கிறார். இதற்க்கு சம்பத் மற்றும் புவனா மறுக்க... இறுதியில் புவனா சம்பத்தை ஏற்றுக்கொள்கிறாரா? புவனா வாழ்க்கை எப்படி ஒரு கேள்விக்குறியாக மாறுகிறது என்பதே இந்த படத்தின் கதை.
வாழ்த்துக்கள் விஜய் அண்ணா; முதல் ஆளாக முந்திக்கொண்டு வாழ்த்து கூறிய பிரபலம்!
இந்நிலையில் இப்படத்தின் காட்சி ஒன்று கடற்கரையில் சிவகுமாரும் - ரஜினிகாந்த்தும் பேசுவது போல் படமாக்க பட்டதாம். இரவு நேரத்தில் தான் அந்த காட்சியை படமாக்க வேண்டும் என இயக்குனர் முடிவு செய்த நிலையில், அங்கிருந்த மீனவர்கள் சிலர் இரவில் அலை அதிகமாக அடிக்கும். என்பதால் முடிந்தவரை 12 மணிக்குள் படப்பிடிப்பை முடித்து விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த காட்சியை எடுத்து முடிக்க நேரம் ஆகிக்கொண்டே சென்றுள்ளது.
இந்த காட்சியை படமாக்கி கொண்டிருக்கும் போதே.... கடலில் இருந்து வந்த பெரிய அலை சிவகுமார், ரஜினிகாந்த், கேமராமேன், என அனைவரையுமே கடலுக்குள் இழுத்துச் செல்ல... நீச்சல் தெரிந்த படக்குழுவினர் எப்படியோ நீந்தி கரையை வந்தடைந்தனர். நடிகர் சிவகுமாரும் நீச்சல் தெரிந்தவர் என்பதால் கரையை கடந்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்துக்கு நீச்சல் தெரியாததால் அவர் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டார். அவரை காணவில்லை என அனைவரும் கடலுக்குள் இறங்கி தேட துவங்கிய நிலையில், எங்கோ ரஜினிகாந்தின் முடி மட்டும் தென்பட... பின்னர் அவரை அப்படியே இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர் மீனவர்கள். மயக்க நிலையில் இருந்த ரஜினிகாந்த், சிகிச்சைக்குப் பின்னரே சுயநினைவுக்கு வந்ததாக சுமித்ரா கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை தன்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும், இது ரஜினிகாந்துக்கு மறு ஜென்மம் என கூறினார்.
ஒரு கரையில்லாத கையை பிடிச்சு போக போறோமே; த.வெ.க கட்சி பாடலால் ஆளும் கட்சியை தாக்கிய தளபதி?