“ஏற்கனவே CM; இப்போ PM.." விஜய்யின் தாய் ஷோபா சொன்னதை நோட் பண்ணீங்களா?

First Published | Aug 22, 2024, 3:52 PM IST

நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முக்கியமான நிகழ்வில் அவரது பெற்றோரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். விஜயின் தாய் ஷோபா அனுப்பிய நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay

கடந்த சில ஆண்டுகளாகவே தனது படங்களிலும் ஆடியோ லான்ச் விழாவிலும் அரசியல் பேசி வந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதாக கூறிய விஜய், 2026-ம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

Vijay

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று தவெகவின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tap to resize

Vijay

மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டர். தவெக கொடி அறிமுக விழாவில் பேசிய விஜய் “ தவெக கட்சியின் கொடி வெறும் கட்சிக் கொடியாக நான் பார்க்கவில்லை.

Vijay

தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். கட்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் தவெகவின் முதல் மாநாடு எப்போது என்ற தேதி அறிவிக்கப்படும்.” என்று கூறினார்.

Vijay Shoba

இந்த நிலையில் விஜய்க்கு அவரின் அம்மா ஷோபா வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில் “ இப்போ போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother) இனி நானும் ஒரு PM (Proud Mother)” என்று ஷோபா தெரிவித்துள்ளார்.
 

Latest Videos

click me!