மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு! இவரின் மருமகளும் ஒரு கோடீஸ்வரி தான்!

Published : Aug 22, 2024, 02:59 PM IST

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 1650 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 60 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் சிரஞ்சீவி பல ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கார்கள் மற்றும் ஒரு பிரைவேட் ஜெட் விமானத்தையும் வைத்துள்ளார்.

PREV
18
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு! இவரின் மருமகளும் ஒரு கோடீஸ்வரி தான்!
Chiranjeevi Networth

மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக வலம் வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், முன்னாள் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட சிரஞ்சீவி 40 ஆண்டுகளுக்கும் மேலாக டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

28
Chiranjeevi

சுமார் 150 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் எண்ணற்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

38
Chiranjeevi

நடிகர் சிரஞ்சீவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1650 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படங்கள், விளம்பரங்கள், தொழில்கள், முதலீடுகள் என பல வழிகளில் இருந்து அவருக்கு வருமானம் வருகிறது. தெலுங்கு திரையுலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிரஞ்சீவி இருக்கிறார். அதன்படி அவர் ஒரு படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.65 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

48
Chiranjeevi

சிரஞ்சீவிக்கு பல நகரங்களில் ஆடம்பர பங்களாக்கள் உள்ளது. அந்த வகையில் ஹைதராபாத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை அவர் வைத்திருக்கிறார். இதே போல் பெங்களூருவிலும் ஒரு ஆடம்பர வீட்டை வைத்திருக்கிறார்.

58
Chiranjeevi

ஆடம்பர பங்களாக்கள் மட்டுமின்றி பல சொகுசு கார்களும் சிரஞ்சீவியிடம் உள்ளன.. ரூ.9 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், ரூ.1.2 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ஓவர் வோக், ரூ. 90 லட்சம் மதிப்புள்ள டொயோடா லாண்ட் க்ரூஸர், ரூ.2.5 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட பல கார்களை அவர் வைத்துள்ளார்.கோடிக்கணக்கிலான பிரைவேட் ஜெட் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார் சிரஞ்சீவி. 

68
Chiranjeevi Family

நடிகர் சிரஞ்சீவி பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மகளான சுரேகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சுஷ்மிதா, ஸ்ரீஜா என்ற இரு மகள்களும் ராம் சரண் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ராம் சரண் தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இத்தனை பிளாக்பஸ்டரா? விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் ப்ரேக் த்ரூவாக அமைந்த படங்கள்!

78
Chiranjeevi Networth

ராம் சரணின் மனைவி உபாசனா. இவர் அப்பல்லோ நிறுவனத்தின் பிரதாப் ரெட்டியின் பேத்தி ஆவார். ராம் சரண் மற்றும் அவரின் மனைவி இருவருக்கும் ரூ.2500 கோடி சொத்து மதிப்பு உள்ளது. இதில் ராம் சரணின் ரூ.1370 கோடியாகும். அவரின் மனைவியும், சிரஞ்சீவியின் மருமகளுமான உபாசனாவின் சொத்து மதிப்பு ரூ.1130 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

88
Chiranjeevi

நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படமான விஷ்வம்பரா படம் அடுத்த ஆண்டு திரையரங்கில் வெளியாக உள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான போலா சங்கர் தோல்வி படமாக அமைந்தது

click me!

Recommended Stories