பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்பதை தெளிவுபடுத்திய விஜய், 2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை 324 தொகுதிகளிலும் சந்திக்க உள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ள தளபதி இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை வெளியிட்டார்.