தமிழ் சினிமாவில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகனாக, காமெடியனாக என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக நேர்த்தியாக நடித்து முடிக்கும் ஒரு மெகா ஹிட் நடிகர் தான் நாசர். சென்னையில் பிறந்து வளர்ந்த அவருக்கு வயது 66, கடந்த 1985ம் ஆண்டு வெளியான "கல்யாண அகதிகள்" என்கின்ற கே. பாலச்சந்தரின் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுரையில் அறிமுகமானார்.
350க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், 150க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நாசர், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக இந்திய விமானப்படையில் சில ஆண்டு காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடப்பட்டது.