வயசுக்கு மரியாதை வேண்டாமா? பரியேறும் பெருமாள் படத்தில்.. வசனம் மறந்ததால் நெல்லை தங்கராஜை அறைந்த மாரி செல்வராஜ்

First Published | Jun 23, 2023, 3:03 PM IST

'பரியேறும் பெருமாள்' ஷூட்டிங் சமயத்தில், வசனம் மறந்துவிட்டது என கூறிய நெல்லை தங்கராஜை, மாரி செல்வராஜ் கன்னத்தில் அறைந்ததாக அவரே தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தை லைகா நிறுவனம் விநியோகம் செய்தது. நடிகர் கதிர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தனர்.  

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், யோகி பாபு, லீஜீஷ்,  மாரிமுத்து, சண்முகராஜன், லிசி ஆண்டனி, அந்தோணி தாசன், நெல்லை தங்கராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தங்கை ஷாமிலியுடன் செலபிரேஷன் மோடில் அஜித்தின் ஆசை மனைவி ஷாலினி! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Tap to resize

சாதிய கொடூரத்தின் இரு வேறு அடுக்குகளில் உள்ள மனிதர்களைப் பற்றி இந்த படத்தில் மூலம் கூறி, அனைவரது கைதட்டல்களையும் தன்னுடைய முதல் படத்திலேயே பெற்றார் இயக்குனர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த,  ஒரு கிராமத்து இளைஞன் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... இந்த படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.  இந்த படத்தில் நெல்லை தங்கராஜின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது, கூத்தின்போது எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும், அதனை சரளமாக பேசும் இவர், கேமரா முன்பு முதல்முறையாக நடிக்கும் போது படபடப்பின் காரணமாக வசனத்தை மறந்து விட்டாராம்.

'லியோ' படப்பிடிப்பின் போது.. காஷ்மீரில் தளபதியுடன் எடுத்த புகைப்படம் வெளியிட்டு பர்த்டே வாழ்த்து கூறிய த்ரிஷா!

இதனை இயக்குனர் மாரி செல்வராஜிடம், வசனம் மறந்து விட்டது என கூற... அவர் நெல்லை தங்கராஜின் வயதை கூட கண்டு கொள்ளாமல் திடீரென கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாராம். இதைத் தொடர்ந்து நான் இனி இப்படத்தில் நடிக்க மாட்டேன் என நெல்லை தங்கராஜ் அடம்பிடிக்க, பின்னர் ஒரு வழியாக அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் கட்டாயப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்த ஆண்டு நெல்லை தங்கராஜ் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மாரி செல்வராஜ் தன்னுடைய துணை இயக்குனர்களை அடிப்பார் என உதயநிதி ஸ்டாலின் சொன்னது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நெல்லை தங்கராஜின் இந்த பேட்டியை தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 'பரியேறும் பெருமாள்' வெளியாகி நெல்லை தங்கராஜின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர், எந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என அவரின் மகள் கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

82 கிலோ முதல்... 352 கிலோ வரை..! 45 வயதிலும் ஒர்கவுட்டில் அசால்ட் செய்யும் ஜோதிகா! வெறித்தனமான வீடியோ!
 

தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், தற்போது ஹிந்தியிலும் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை கரண் ஜோஹர் இயக்க சித்தாந்த் சதுர்வேதியும், நடிகை திருப்தி திம்ரியும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

Latest Videos

click me!