தமிழ் சினிமாவில் வியத்தகு பல சாதனைகளை படைத்தவர் தான் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்திய பெருமையும் கமலையே சாரும். அந்த அளவுக்கு சினிமாவிற்காக அயராது உழைக்கும் கமல்ஹாசனை ஒருவர் விமர்சித்தால் சும்மா விடுவார்களா. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் நடந்தது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் படத்தை மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் விமர்சித்து இருந்தார்.
26
maamannan
கமலை அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு விருந்தினராக அழைத்து அவரை முன் வரிசையில் அமர வைத்துக்கொண்டே அவரின் மாஸ்டர் பீஸ் படமான தேவர்மகனை மாரி செல்வராஜ் விமர்சித்தது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் மாரி செல்வராஜ் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கமலை கடுமையாக தாக்கி மாரி செல்வராஜ் எழுதிய கடிதத்தை வைரலாக்கி பரபரப்பை ஏற்படுத்தினர்.
36
maamannan
மாரி செல்வராஜ் தேவர்மகன் படத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் அப்படத்தை விமர்சித்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் அவரை சாடினர். மாமன்னன் ஆடியோ லாஞ்சில் தான் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ள மாரி செல்வராஜ், கமல்ஹாசன், மாமன்னன் படம் பார்த்து என்ன விமர்சனம் சொன்னார் என்பதையும் அதில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது : “மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ரொம்ப எமோஷனலான தருணம். அவரிடம் நெருக்கமாக பேசியதால் தான் அந்த எமோஷன் வெளிவந்தது. அது கமல் சாருக்கும் தெரியும். 13 வருஷத்துக்கு முன்னர் அப்படி கடிதம் எழுதியது, அந்த சமயத்தில் எனக்கு இருந்த கோபத்தையும், மொழி வாசிப்பையும் வைத்து எழுதப்பட்டது. அதன்பின் மிகப்பெரிய உழைப்பை போட்டு தான் நான் சினிமாவை கற்றிருக்கிறேன்.
56
maamannan
கமல் சார் பரியேறும் பெருமாள் பார்த்துட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார். அவர் மாமன்னனும் பார்த்துவிட்டார். அவருடன் அமர்ந்து தான் நானும் படத்தை பார்த்தேன். பார்த்து முடித்ததும் என் கையை பிடித்து அவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது என் உடம்பெல்லாம் நடுங்கியது. அது அவருக்கும் தெரியும், மாமன்னன் படத்தை உணரக்கூடியவர் தான அவர். நான் அந்த விழாவில் பேசிய பின்னர் கமல் சார் பேசுகையில், இது மாரியின் அரசியல் இல்லை, நம் அரசியல் என சொன்னபோது எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்.
66
Mari selvaraj
மேடையில் பேசும் போது நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். அந்த வீடியோ பார்த்தாலே தெரியும், நான் எதோ பேச ஆரம்பித்து எதையோ பேசி இருப்பேன். என் எதிரே அமர்ந்திருந்த கமல் சாரை பார்த்து பேசினேன். பேசி முடித்து கீழே வந்ததும் எதுவும் தப்பா பேசிட்டேனா என உதயநிதியிடம் கேட்டேன். அவர் சரியா தான் பேசுனீங்கனு சொன்னாரு. வீட்டை விட்டு ஓடிப்போன மகன் திரும்பி வந்து அப்பாவிடம் கோபமாக பேசியது போன்றது தான் அது” என கூறியுள்ளார்.