விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் விறுவிறுவென தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
24
Indian 2
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றது. அங்கு கமல்ஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரு மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்கும் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை ஆரம்பிக்க உள்ள இயக்குனர் ஷங்கர், இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதன்படி பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசனும் வில்லனாக நடிக்க உள்ளார். இப்படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், இது இந்தியன் 2 படத்துடன் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
44
Project K
புராஜெக்ட் கே படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கியவர் ஆவார். புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.