சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆக உள்ள நிலையில், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது.