பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான பாரதி ராஜா தன்னுடைய 81 வயதில் கூட மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் தற்போதைய இளம் நடிகர்களின் படங்களில் வயதான தோற்றத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் மதுரைக்கு சென்ற இவர், அங்கிருந்து சென்னை திரும்ப விமான நிலையம் வந்த போது, விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்தார் இதை தொடர்ந்து அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட்டது.
bharathi raja manoj
கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜாவுக்கு, அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது நிலை உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் இயக்குனர் பாரதி ராஜா இரண்டே நாட்களில் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாரதி ராஜா பூரண நலம் பெற்று இன்று பகல் 12;30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்றும் வெளியாய்க்கியுள்ளது.