கல்கி எழுதிய வரலாற்று சிறப்புக்கள் கொண்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க எம்.ஜி.ஆர், உலக நாயகன் கமல்ஹாசன் முதல்கொண்டு சிலர் முயற்சி செய்த நிலையில்... ஒரு சில காரணங்களால் அது நிறைவேறாமலே போனது. இந்த கதையை படமாக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு, சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் படமாக இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி,விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரபு, பார்த்திபன், முதல்கொண்டு பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே இந்த ஒரு படத்திற்காக பல படங்களின் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர்.
அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க சம்மதித்து, பின்னர் வெளியேறுவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு. இவர்கள் இருவரும் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.