varalakshmi sarathkumar : தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி, தனக்கு விருப்பமான கேரக்டர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் - சிம்பு கூட்டணியில் ரிலீசான போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக பாலாவின் தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.
24
விஷால் - லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான சண்டக்கோழி படத்தின் மூலம் வில்லியாக அவதாரம் எடுத்த வரலட்சுமிக்கு அடுத்தடுத்து விஜய்யின் சர்கார், தனுஷின் மாரி 2 போன்ற படங்களில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் வரலட்சுமி. குறிப்பாக தமிழில் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யசோதா, சபரி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி.
44
இந்நிலையில், நடிகை வரலட்சுமி, சமீபத்திய பேட்டியில், தனக்கு நகைச்சுவை கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ஆனால் அதுபோன்ற பட வாய்ப்புகள் தனக்கு வருவதில்லை என்றும் கூறி இருக்கிறார். தனக்கு பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு வருவதாகவும், யாராச்சும் காமெடி படங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று ஓப்பனாக வாய்ப்பு கேட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.