நீண்ட காலமாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த கமல்ஹாசனுக்கு, சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான, 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.
25
இந்த படத்தில் நடித்துள்ளது மட்டும் இன்றி இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. எனவே மீண்டும் ஃபாமுக்கு வந்துள்ள கலஹாசன், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை தொடர்ந்து அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களின் கதைகளையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதை தவிர, அடுத்தடுத்து 4 படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் விஜய் டிவியில் துவங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பங்கேற்க தயாராகி வருகிறார். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு கமல் நடித்த பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி, விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்க உள்ளது உறுதியானது.
45
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் பரபரப்பாக செயல்பட்டு வரும், கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படவிழாவின் போது தன்னுடைய மகள் அக்ஷராஹாசனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை அக்ஷரா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அப்பா மகள் இருவருமே செம்ம ஸ்டைலிஷ், மற்றும் ட்ரடிஷனல் லுக்கில் இந்த புகைப்படங்களில் உள்ளனர். இவர்களின் இந்த அசத்தல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.