'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த சீரியல் நடிகையா?

First Published | Sep 9, 2022, 1:27 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய்யின் நந்தினி கதாபாத்திரத்திற்கு பிரபல சீரியல் நடிகை தான் டப்பிங் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும், சுமார் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. எனவே இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
 

அண்மையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்த, 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், திரையுலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் மற்றும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டது. குறிப்பாக  கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்: எனக்கு அந்த பெண் மகளே இல்லை! அவன் மகா மட்டமானவன்.. பல வருட ரகசியத்தை உடைத்த ராஜ்கிரண்! வெளியான பகீர் அறிக்கை!
 

Tap to resize

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசியுள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும், நந்தினி கேரக்டருக்கு பிரபல டப்பிங் கலைஞர் மற்றும் சீரியல் நடிகையுமான தீபா வெங்கட் தான் பின்னணி குரல் கொடுத்து இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். எனவே இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, மோகன்லால், மீரா ஜாஸ்மின் ஆகிய 20 பிரபலங்களின் ஓணம் பண்டிகை செலெப்ரேஷன் போட்டோஸ்.!
 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மிகந்த மகிழ்ச்சி மற்றும்  பெருமை கொள்வதாகவும், . முதன்முறையாக ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் குரல் கொடுக்க வாய்ப்பளித்த மணிரத்னம் அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!