நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் நாட்டில் பிறந்தவராக இருந்தாலும், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நேற்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையை, கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் கொண்டாடாமல், படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இவர், தன்னுடைய முதல் இரண்டு படங்களிலேயே தமிழ் திரையுலக ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
விறுவிறுப்பாக இந்த படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த வருட ஓணம் பண்டிகையை படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே உள்ளது. இது போக... தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா படத்தில் கதாநாயகியாகவும், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக்காக, சிரஞ்சீவி நடித்து வரும் 'போலா ஷங்கர்' படத்தில் அவருக்கு தங்கை வேடத்திலும் நடித்து வருகிறார்.