தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குனராக உள்ளவர் அட்லீ. இவர் நடிகர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், மற்றும் நஸ்ரியாவை வைத்து இயக்கிய 'ராஜா ராணி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, மட்டுமின்றி அட்லீக்கு சிறந்த அறிமுக படமாகும் அமைந்தது. முதல் படத்திலேயே சில காப்பி பிரச்சனையில் சிக்கினாலும், கமர்ஷியல் ஹிட் கொடுத்த அட்லீ அடுத்தடுத்து விஜய்யை வைத்து, தொடர்ந்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
தற்போது கோலிவுட் திரையுலகத்தை தொடர்ந்து, பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த வருகிறார். அதேபோல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பிரியா மற்றும் அட்லீக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.