Thalapathy 67: 'விக்ரம்' வெற்றிக்கு கைமாறு செய்யும் கமல்ஹாசன்! தளபதி 67 படத்தில் இணைகிறாரா உலக நாயகன்?

First Published | Jan 23, 2023, 8:29 PM IST

உலகநாயகன் கமலஹாசன், 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான 'வாரிசு' திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் அடுத்ததாக தான் நடிக்க உள்ள 67வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினத்தை முன்னிட்டு  இப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Sudheer Varma Suicide: திரையுலகில் பரபரப்பு... பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

Tap to resize

அதே போல் 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார், என்பதால் இப்படத்தில் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இதில் விஜய் மற்றும் மிஷ்கின் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு, கமல்ஹாசன் தளபதி 67 படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை 'விக்ரம்' என்கிற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கன்ராஜுக்கு கைம்மாறு செய்யும் தாமாக கமல்ஹாசன் செய்கிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்து வருகிறது.

யார் இந்த விக்ரமன்? வெற்றிவாய்ப்பை கடைசி நேரத்தில் நழுவ விட என்ன காரணம்..! ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!

எது எப்படி இருந்தாலும், விக்ரம் படத்தில் எப்படி ரோலெக்ஸ்சாக வந்து சூர்யா கலக்கினாரோ... அதை விட 10 மடங்கு, கெத்தான கதாபாத்திரத்திலேயே, கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேங் ஸ்டாராக விஜய் நடிக்கும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்களும் வெளியாகும் வரை கார்த்திருப்போம்.

குவியும் பட வாய்ப்பு... கொட்டும் பணம்! பீச் ஹவுஸை தொடர்ந்து ரெஸ்ட்டாரெண்ட் துவங்கும் பிரியா பவானி ஷங்கர்!

Latest Videos

click me!