Sudheer Varma Suicide: திரையுலகில் பரபரப்பு... பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

First Published | Jan 23, 2023, 7:34 PM IST

தெலுங்கு திரையுலகை சேர்ந்த, இளம் நடிகர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சுதீர் வர்மா, இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் டோலிவுட் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுதீர் வர்மாவுக்கு தற்போது டோலிவுட்டில் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.  'குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக லைஃப் இஸ் பியூட்டிபுல் புகழ் சுதாகர் கோமகுலா நடித்துள்ளார்.

யார் இந்த விக்ரமன்? வெற்றிவாய்ப்பை கடைசி நேரத்தில் நழுவ விட என்ன காரணம்..! ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!

Tap to resize

இந்த அப்படத்தை தொடர்ந்து செகண்ட் ஹேண்ட் மற்றும் ஷூட் அவுட் அட் அலேரு ஆகிய படங்களிலும் சுதிர் வர்மா நடித்துள்ளார். தற்போது வரை, நடிகர் சுதீர் வர்மாவின், தற்கொலைக்கு என்ன பிரச்சனை என்பதை அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட பிரச்சனை தான் இவரின் இந்த பயங்கர முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது.

சுதீர் தற்கொலை குறித்த தகவல், டோலிவுட் திரையுகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே போல், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இவருடைய தற்கொலைக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்துவருகிறார்கள். இவருடைய தற்கொலை குறித்து, தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதாநாயகி ஆனதும் கூடிய அழகு... இளசுகளை கவர்ந்திழுக்கும் குட்டி நயன் அனிகாவின் அசத்தல் போட்டோஸ்!

Latest Videos

click me!