தமிழில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் விருந்தினர் மாளிகையில் மிக பிரமாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட, பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிடவே, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவர்களின் திருமணத்தில் முக்கிய குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் பிரபலங்கள் என சுமார் 100 பேர் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலைப் போலவே இந்த ஜோடியும், தொலைபேசி போன்றவற்றை கொண்டு வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்தததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாரம்பரிய முறைகளை பின் பற்றி இவர்க்ளின் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.