உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலா பட நடிகர்..! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

First Published | Jul 28, 2022, 2:38 PM IST

பிரபல இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழி சினிமாவில், இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.எம்.குமார் கடந்த 1986 ஆம் ஆண்டு, பிரபு ஹீரோவாக நடித்த  அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் ஜி.எம்.குமாருக்கு அடுத்த சில படங்களை இயக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது. 

இருப்பினும் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை இவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரது வணிக மதிப்பு கணிசமாகக் குறைந்து. இவரது ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, பிட்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கினார். 

மேலும் செய்திகள்: தனுஷின் பிறந்தநாளில்... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் 'Life of Pazham' சிங்கிள் பாடல்!
 


'உருவம்' படத்தை இயக்கியது மட்டும் இன்றி, தயாரிக்கவும் செய்தார். இப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை இவருக்கு ஏற்படுத்தியதால், பின்னாளில் திரைப்படங்கள் இயக்குவதில் இருந்தே விலகினார். பின்னர் இயக்குனர் பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

அதிலும் குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில், ஆர்யா - விஷால் நடிப்பில் வெளியான 'அவன் இவன்' படத்தில் இவர் நடித்த ஹைனெஸ் என்ற கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இவரது நடிப்புக்கு சில விருதுகளும் கிடைத்தது. திரைப்படத்தை தொடர்ந்து, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, தமன்னா நடிப்பில்... வெளியான வெப் தொடரான 'நவம்பர் ஸ்டோரி' தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!
 

இந்நிலையில் இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், இவரது குடும்பத்தினர்.. இவரை உடனடியாக முகலிவாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இவரது மருத்துவமனை புகைப்படம் ஒன்று வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் தொடர்ந்து இவர் நன்கு உடல் நலம் தேறி வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அட கடவுளே... ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு இப்படி ஒரு தடங்கலா?
 

Latest Videos

click me!