Published : Jul 28, 2022, 01:42 PM ISTUpdated : Jul 28, 2022, 01:53 PM IST
நடிகர் துல்கர் சல்மான் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷனில் பிசியாக இருக்கிறார் இவர். தற்போது தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் மலையாள நடிகர் துல்கர் ஆடம்பரக்கார் பிரியர் என சொல்லப்படுகிறது. அவரிடம் உள்ள கார்கள் குறித்தான லிஸ்ட் சமீபத்தில் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் தந்தை மலையாள சூப்பர் ஹீரோ மம்முட்டி ஆவார்.
ஃபெராரி 458 ஸ்பைடர் சொகுசு காரை துல்கர் சல்மான் சொந்தமாக வைத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 1.74 கோடி என சொல்லப்படுகிறது. இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இவரது தந்தை மம்முட்டி இடம் ஃபெராரி 812 கார் உள்ளது. அதன் விலை சுமார் 4 கோடி.
துல்கர் சல்மானின் கேரேஜில் இடம் பெற்றுள்ள அடுத்த ஆடம்பர கார் பிஎம்டபிள்யூ எக்ஸ் 6எம் இதன் விலை சுமார் 2.13 கோடி ரூபாய். இந்த கார் அதிக வேகத்தில் இயங்கக் கூடியது. மிகவும் கம்பீரமான வாகனத்தை தன் சொந்தமாக வைத்துள்ளார் துல்கர். அதே போல 1.4 கோடி மதிப்புள்ள BMW M3 CS காரையும் வைத்துள்ளார் துல்கர்.
3.8 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் ஷெட்டானை வைத்துள்ளார் துல்கர் சல்மான். இதன் விலை இரண்டு கோடி ரூபாய். முன்னதாக துல்கர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது இந்த காரில் தான் வந்திருந்தார் நடிகர். கேரள தெருக்களில் இந்த காரில் தான் அடிக்கடி சுற்றி வருவார்.
கடந்த வருடம் Mercedes - AMG G63 காரை பரிசாக வழங்கியது. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின. இதன் மதிப்பு சுமார் 2.45 கோடி ரூபாய் எனக்கு கூறப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் பொதுவாக காணப்படுவதில்லை. கிரீன் மெட்டாலிக் கொண்ட டிசைனோ ஆலிவ் கிரீன் மெட்டாலிக் காரைத்தான் துர்கா சல்மான் வைத்துள்ளார்.