Dhanush birthday special : அதிக வசூலை பெற்று பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் படங்கள்...

Published : Jul 28, 2022, 11:37 AM ISTUpdated : Jul 28, 2022, 11:40 AM IST

Dhanush birthday special : தனுஷ் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி கிரே, வாத்தி என அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. தேசிய விருது நாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக  அவரது ஹிட் படங்கள் குறித்து பார்க்கலாம்...

PREV
110
Dhanush birthday special : அதிக வசூலை பெற்று பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் படங்கள்...
Pudhu Pettai

புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமாராக வந்து ரசிகர்களை கொக்கிப்போட்டு இழுத்திருந்தார் நடிகர் தனுஷ். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை நடிகரின் அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார். இதில் சோனியா அகர்வால், சினேகா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான புதுப்பேட்டையில் ரவுடியாக தோன்றியிருப்பார் தனுஷ்.  சுமார் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.கோடிகளை வசூலாக பெற்று சாதனை படைத்தது

210
Aadukalam

சேவல் சண்டையை மையமாக வைத்து ஆடுகளம் என்னும் படம் உருவாகி இருந்தது. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் தனுஷ் கிராமத்து இளைஞனாக நடித்திருப்பார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் ஹிட் அடித்தன.  அதோட இந்த படம் 58வது தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றது. சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகர் உள்ளிட்ட ஆறு விருதுகளை குவித்து இருந்தது ஆடுகளம். 5 ஸ்டார் கதிரேசன் ரூ.10 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்த படம் நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் ரூ. 30 கோடிகளை வசூலாக பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...the legend : தி லெஜண்ட் படத்தை ஏன் பார்க்க வேண்டும்... 5 காரணங்கள் இதோ!

310
Raanjhanaa

தனுஷின் பாலிவுட் ப்ரவேசமான ராஞ்சனா படம் ஏ ஆர் ரகுமான் இசையில் தடபுடலாக ரெடியாகி வெளியானது. சோனம் கபூர் நாயகியாக நடித்த இது காதல் நடக படமாக ரசிகர்களின் பேராதரவை பெற்றது. சுமார் ரூ.36 கோடி  பட்ஜெட்டில்  உருவான இந்தப் படம் ரூ.94 கோடியை வசூலித்து பாலிவுட்டிலும் தனுசுக்கு ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது.

410
Velaiilla Pattadhari

பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய விஐபி படம் பிளாக் பாஸ்டர் படமாக ஹிட் ஆனது. இந்த படத்தை தனுஷ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்திருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. சுமார் எட்டு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை பெரிதும் கவர்ந்து ரூ.53 கோடி வசூலாக பெற்றது.

மேலும் செய்திகளுக்கு....தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..

510
Anegan

கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அநேகன் படத்தில் நான்கு வெவ்வேறு காலகட்டத்தில் நடப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டு இருக்கும். தனுஷ், கார்த்தி, அமைரா தஸ்துரின் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.   மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 25 கோடி ரூபாயில் தயாராகி 51 கோடி ரூபாயை வசூலாக பெற்றது.

610
Maari

தனுஷ், விஜய் ஏசுதாஸ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த மாரி படம் தனுஷின் ஹிட் லிஸ்டில் ஒன்றானது. அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் வரவேற்புகளை பெற்றிருந்தன. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது 35 கோடியில் தயாரான இது  ரூ.60 கோடி ரூபாயை வசூலாக பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...ஒருபக்கம் அப்டேட்ஸ்.. மறுபக்கம் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் தனுஷ் - வைரல் போட்டோஸ் !

710
Vada Chennai

மீண்டும் வெற்றி மாறனுடன் கூட்டணி அமைத்த தனுஷ் வடசென்னை என்னும் வெற்றி படத்தை கொடுத்திருந்தார். உள்ளூர் ரவுடி கும்பல் தொடர்பான கதைகளத்தை இது கொண்டிருந்தது. சமுத்திரகனி கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடந்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில்  உருவான இந்த படம் 65 கோடி ரூபாய் செலவில் தயாராகி 120 கோடிகளை லாபமாக பெற்றது.

810
Asuran

கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகியிருந்த அசுரன் படத்தையும் வெற்றிமாறன் தான் இயக்கி இருந்தார். பூமணியின் வெட்கை நாவலை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. இது 67 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில்  சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அசுரன் 75 கோடி ரூபாயில் தயாராகி 153 கோடியை  வசூலாக குவித்து மேலும் ஒரு சாதனையை படைத்தது.

910
karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் கர்ணன் என்னும் ஹிட் படம் வெளியானது. கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான கர்ணன் கடந்த 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் சாதிய வன்முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ரூ.40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இது டிக்கெட் வசூல் மூலம் ரூ.98 கோடி ரூபாயை வசூலாக பெற்றிருந்தது.

1010
Jagame Thandhiram

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ஜகமே தந்திரம் netflix ott தளத்தில் வெளியானது. இதில் தனுஷ் ஜேம்ஸ் காஸ்மோ,  ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் என பலர் நடித்து இருந்தனர். கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் இது ரூ.147 கோடியை  வசூலாக பெற்றது. இந்த படம் ரூ.60 கோடி ரூபாயில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories