தனுஷின் இட்லி கடைக்கு எகிறும் மவுசு! ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?
தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், அருண் விஜய் நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது.
தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், அருண் விஜய் நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது.
Netflix Grab Idly Kadai OTT Rights : தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கைவசம் குபேரா, ராஞ்சனா 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் நடிப்பில் மட்டுமின்றி படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தை இயக்கினார் தனுஷ்.
தனுஷின் இட்லி கடை
நீக் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. நீக் படத்தின் தோல்விக்கு பின் அவர் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... Dhanush Idli Kadai: இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா? ஆகாஷ் பாஸ்கரன் பளீச்!
இட்லி கடை ரிலீஸ் தள்ளிவைப்பு
இட்லி கடை திரைப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதனுடன் போட்டியிடாமல் அப்படம் பின் வாங்கியதாக கூறப்பட்டது. பின்னர் இதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும். எஞ்சியுள்ள 10 சதவீத படப்பிடிப்பை முடித்த பின்னரே இட்லி கடை படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்து இருந்தார்.
இட்லி கடை ஓடிடி ரைட்ஸ்
இந்நிலையில், இட்லி கடை படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதன்படி இட்லி கடை படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் ரூ.45 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாம். இதனால் இட்லி கடை படக்குழு செம ஹாப்பியாக உள்ளதாம். ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டி வருவதால் இட்லி கடை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்... நடிகர் அஜித்தால் தனுஷின் இட்லி கடைக்கு வந்த சிக்கல்!