அர்ஜுன் கபூருக்கு செம அடி
2023ம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆன லேடி கில்லர் திரைப்படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹீரோ அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். ரொம்ப நாட்களாக ஒரு சரியான ஹிட்-க்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜுன் கபூருக்கு இந்த திரைப்படம் ஒரு ஆறுதல் கொடுக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து பெரிய அடி விழுந்தது. அப்போதே மலாய்கா அரோராவுடன் டேட்டிங்கில் இருந்தார் அர்ஜுன் கபூர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நியூஸில் இருந்த அர்ஜுன் கபூர், ஒரு நல்ல பிரேக்கிற்காக காத்துக் கொண்டிருந்த நேரத்தில் கெரியரில் மிகப்பெரிய டிசாஸ்டர் ஆக இந்த படம் அமைந்தது.