எம்புரான் சர்ச்சை எதிரொலி; மன்னிப்பு கேட்ட மோகன்லால் - காட்சிகள் நீக்கப்படுமா?
லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ள எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார்.
லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ள எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Mohanlal Apologizes for Empuraan Controversy : பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் எம்புரான். இத்திரைப்படத்தின் காட்சிகள் குறித்து சர்ச்சை எழுந்தது. படத்தில் இருந்து சில சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விஷயங்களை கண்டிப்பாக படத்தில் இருந்து நீக்க நாங்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளோம் என்றும் மோகன்லால் தெரிவித்தார்.
மோகன்லால் அறிக்கை
'லூசிபர்' இரண்டாம் பாகமான 'எம்புரான்' திரைப்படத்தின் உருவாக்கத்தில் வந்துள்ள சில அரசியல்-சமூகக் கருத்துக்கள் என்னை நேசிப்பவர்களில் சிலருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக நான் அறிந்தேன். ஒரு கலைஞனாக, எனது எந்தவொரு திரைப்படமும் எந்த அரசியல் இயக்கம், கருத்து அல்லது மதப் பிரிவினருக்கு எதிராக வெறுப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்வது எனது கடமை. எனவே, என் அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு, எனக்கும் எம்புரான் குழுவினருக்கும் மனமார்ந்த வருத்தம் உண்டு.
இதையும் படியுங்கள்... 17 காட்சிகளுக்கு கத்திரி போடும் எம்புரான் படக்குழு - காரணம் என்ன?
காட்சிகளை நீக்க முடிவு
மேலும் திரைப்படத்தின் பின்னணியில் பணியாற்றிய நாங்கள் அனைவரும் அதற்கு பொறுப்பு என்ற புரிதலுடன், இதுபோன்ற விஷயங்களை கண்டிப்பாக படத்தில் இருந்து நீக்க நாங்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளோம். கடந்த நான்கு தசாப்தங்களாக நான் உங்களில் ஒருவனாகவே எனது சினிமா வாழ்க்கையை வாழ்ந்தேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதைவிட பெரியது எதுவுமில்லை என்று நான் நம்புகிறேன்.
புதிய வெர்ஷன் எப்போ?
எம்புரானின் மறுபதிப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் முப்பது நிமிடங்களில் காண்பிக்கப்படும் குஜராத் கலவர காட்சிகள் குறைக்கப்படும். மத்திய அரசுக்கு எதிரானவர்களை தேசிய ஏஜென்சி வழக்குகளில் சிக்க வைப்பதாகக் காட்டும் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்படும். பாபா பஜ்ரங்கி என்ற வில்லனின் பெயரை மாற்ற ஆலோசனை இருந்தாலும், படத்தில் தொடர்ந்து வரும் இந்த பெயரை மாற்ற முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
இதையும் படியுங்கள்... இரண்டே நாளில் 100 கோடி! பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்த 'L2: எம்புரான்'!