மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த இளையராஜா!
Ilaiyaraaja Moksha Deepam For Manoj Bharathiraja : மனோஜ் பாரதிராஜாவிற்கு இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
Ilaiyaraaja Moksha Deepam For Manoj Bharathiraja : மனோஜ் பாரதிராஜாவிற்கு இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
சிம்புவின் மாநாடு, ஈஸ்வரன் போன்ற படங்களிலும் கார்த்தியின் விருமன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமின்றி மார்கழி திங்கள் படம் மூலமாக இயக்குநராகவும், பின்னணி பாடகராகவும் திகழ்ந்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்று 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் கடந்த 25ஆம் தேதி மனோஜ் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரை பிரபலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் என்று ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.
மனோஜ் இறப்பதற்கு முன்னதாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு வீடு திரும்பிய அவர் ஒரு சில நாட்களுக்குள்ளாக உயிரிழந்துள்ளார். மனோஜூக்கு உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி பெசன்ட் நகர் மின் மயானத்தில் மனோஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் மனோஜ் மறைவுக்கு இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய ரமணர் ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் புனித் ராஜ்குமார், பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்பட பலருக்கும் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.