பானுப்பிரியா சொன்ன படம் எது?
பானுப்பிரியா ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய படம், சமீபத்தில் வந்த `நாட்டியம்` (2021) என்கிற தெலுங்கு படம் தான். ரேவந்த் கோருக்கொண்டா இயக்கிய இந்த படத்தில் கிளாசிக்கல் டான்சர் சந்தியா ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சந்தியாராஜு அம்மா கதாபாத்திரத்தில் பானுப்பிரியா நடித்துள்ளார். ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரியதாக முக்கியத்துவம் இல்லை என்றும், கதை சொல்லும்போது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என சொன்னதாகவும், இப்படி அப்படி என்று நிறைய பில்டப் விட்டார்கள் என்றும் கடைசியில் செட்டுக்கு போனால் தன்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து ஷாக் ஆனதாக தெரிவித்திருந்தார்.