ஆரம்பித்த வேகத்தில் புது சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி! ஷாக் ஆன ரசிகர்கள்
சீரியல்களுக்கு பேமஸ் ஆன சன் டிவி, கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கிய சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீரியல்களுக்கு பேமஸ் ஆன சன் டிவி, கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கிய சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sun TV New Serial End Soon : சன் டிவி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் சீரியல்கள் தான். சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பினாலும், டிஆர்பியில் சன் டிவி சீரியல்களை நெருங்க கூட முடியவில்லை. வார வாரம் டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது சன் டிவியில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சிங்கப்பெண்ணே என்கிற புது சீரியல் தான். அதேபோல் இரண்டாம் இடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது.
முடிவுக்கு வரும் புது சீரியல்
இப்படி சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல்கள் டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தினாலும் மறுபுறம், அண்மையில் தொடங்கப்பட்ட புது சீரியல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவர உள்ளது சன் டிவி. அது வேறெதுவுமில்லை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரஞ்சனி என்கிற சீரியலை தான் விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளார்களாம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டுவிட்டது. இதனால் ஓரிரு வாரங்களில் ரஞ்சனி சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... TRPயில் மளமளவென முன்னேறிய அய்யனார் துணை; இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
ரஞ்சனி சீரியல் கிளைமாக்ஸ்
நட்பை மையமாக வைத்து ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகி வந்தது. சிம்பிளாக சொல்லப்போனால் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இந்த தொடர் உருவாகி வந்தது. மெல்ல மெல்ல பிக் அப் ஆகி வந்த இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், தற்போது ரஞ்சனி சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளனர்.
ரசிகர்கள் அப்செட்
ரஞ்சனி சீரியல் தொடங்கப்பட்டு 4 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தொடரைக் காட்டிலும் பல மொக்கையான சீரியல்கள் எல்லாம் இருக்கையில் அதைவிட்டுவிட்டு இந்த சீரியலை ஏன் நிறுத்துகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சீரியலை முடிப்பதற்கு பதிலாக இதன் நேரத்தை மாற்றலாம் அல்லது பிற்பகலில் ஒளிபரப்பலாம் என யோசனையும் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சன் டிவி சீரியல்களை பந்தாடும் விஜய் டிவி; டாப் 10 சீரியல் TRP இதோ