ரஜினி பட வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய வீர தீர சூரன்!
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை நான்கே நாட்களில் முறியடித்துள்ளது.
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை நான்கே நாட்களில் முறியடித்துள்ளது.
Veera Dheera Sooran Day 4 Box Office Collection : தமிழ் சினிமாவில் தரமான நடிகராக கலக்கி வருபவர் விக்ரம். இவர் எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்து நடிப்பார். ஆனால் இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சோலோ ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை. இடையே மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டார் படமான பொன்னியின் செல்வனில் நடித்து வெற்றி கண்டார். ஆனால் இதையடுத்து அவர் நடித்த கோப்ரா, தங்கலான் போன்ற படங்கள் தோல்வியை தழுவின.
கம்பேக் கொடுத்த விக்ரம்
விக்ரம் எப்போ கம்பேக் கொடுப்பார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு வீர தீர சூரன் பாகம் 2 படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் விக்ரம். இப்படத்தை சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கலைவாணி என்கிற கேரக்டரில் நடிகை துஷாரா விஜயனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் சூரஜ் வெஞ்சரமூடு, பிருத்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரவுண்டு கட்டிய ரசிகர்கள்; சட்டென ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு ஜூட் விட்ட விக்ரம் - வீடியோ இதோ
வசூல் வேட்டையாடும் வீர தீர சூரன்
வீர தீர சூரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் ரிலீஸ் செய்துள்ள படக்குழு, முதல் பாகத்தை அடுத்ததாக வெளியிட உள்ளனர். இப்படம் முதல் நாளில் சற்று லேட்டாக ரிலீஸ் ஆனாலும், பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் போகப் போக பிக் அப் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வீர தீர சூரன் வசூல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ரஜினி பட சாதனையை முறியடித்த விக்ரம்
குறிப்பாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ரூ.10 கோடி வசூலித்திருந்த இப்படம் நேற்று மட்டும் சுமார் 5 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரம் வசூலை வாரிக்குவித்துள்ளது. இதன்மூலம் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16 கோடி வசூலித்துள்ளது. மேலும் ரஜினியின் லால் சலாம் பட லைப் டைம் வசூல் சாதனையையும் வீர தீர சூரன் முறியடித்துள்ளது. அப்படம் தமிழ்நாட்டில் மொத்தமாகவே ரூ.11 கோடி தான் வசூலித்து இருந்தது. அந்த சாதனையை நான்கே நாட்களில் அசால்டாக அடிச்சு தூக்கி இருக்கிறது வீர தீர சூரன்.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விக்ரம்? வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம் இதோ