சல்மான் கான் நடித்த 'சிகிந்தர்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பாக்ஸ் ஆபிஸில் சுமாரான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. முதல் நாள் வசூலில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் படமான 'சாவா' படத்தின் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டது. தற்போது வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதனை நிரூபித்துள்ளது.
'சிகிந்தர்' திரைப்படம் முதல் நாள் வசூல்:
ஆரம்பகட்ட தகவலின் படி, 'சிகிந்தர்' திரைப்படம் முதல் நாள் வசூலில் 26.48 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விக்கல் கௌஷல் நடிப்பில் வெளியான சாவா பட வசூலை விட குறைவு. 'சாவா' திரைப்படம் முதல் நாளில் 33.10 கோடி ரூபாய் வசூல் செய்தது.
சிக்கந்தர் மூலம் கம்பேக் கொடுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்? விமர்சனம் இதோ
ரூ.30 கோடியை கூட எட்டவில்லை
சிகிந்தர் திரைப்படம், ரூ.30 கோடியை கூட எட்டவில்லை என்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பெரிய ஓப்பனிங் திரைப்படமாக அமைந்துள்ளது.
200 கோடி ரூபாய் செலவில் சாஜித் நாடியாட்வாலா தயாரித்துள்ளார்.
'சிகிந்தர்' திரைப்படத்தை சாஜித் நாடியாட்வாலா தயாரித்துள்ளார். அவர் நாடியாட்வாலா கிராண்ட்ஸன் பேனரின் கீழ் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் சத்யராஜ், காஜல் அகர்வால், பிரதீக் பப்பர், ஷர்மன் ஜோஷி மற்றும் அஞ்சனி தவான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.