வசூலில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஓட ஓட விரட்டிய சூரியின் மாமன்!

Published : May 19, 2025, 12:34 PM IST

சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் காட்டிலும் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள மாமன் திரைப்படம் அதிகம் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.

PREV
14
Maaman Overtakes DD Next Level: Day 3 Box Office Collections

சூரியும், சந்தானமும் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்கள். இவர்கள் இருவருமே தற்போது காமெடி கதாபாத்திரங்களுக்கு டாடா காட்டிவிட்டு, முழுநேர ஹீரோவாகிவிட்டனர். காமெடியனாக கொண்டாடப்பட்ட சந்தானம் ஹீரோவாக பெரியளவில் ஜொலிக்கவில்லை. அதேவேளையில், சூரி காமெடியனாக எப்படி கலக்கினாரோ, அதேபோல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தில் இருந்து தொடர் வெற்றிகளை பெற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

24
சூரி - சந்தானம் படங்கள் மோதல்

சூரி ஹீரோவாக நடித்த படமும் சந்தானம் ஹீரோவாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி உள்ளன. அதன்படி சூரி நடித்த மாமன் திரைப்படமும், சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் கடந்த மே 16ந் தேதி திரைக்கு வந்தது. இதில் மாமன் படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இது ஒரு பேமிலி எண்டர்டெயினர் படமாகும். அதேபோல் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இது காமெடி கலந்த ஹாரர் கதையம்சம் கொண்ட படமாகும்.

34
டிடி நெக்ஸ்ட் லெவல் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை ஆர்யா தயாரித்து இருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகித்து வந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ.2.54 கோடி வசூலித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரியளவில் சோபிக்கவில்லை. சனிக்கிழமை ரூ.2.59 கோடி வசூலித்த இப்படம், ஞாயிறன்று வெறும் ரூ.2.79 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது.

44
மாமன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் காட்டிலும் மாமன் திரைப்படம் முதல் நாளில் கம்மியான வசூலை பெற்றிருந்தது. இப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.1.53 கோடி மட்டுமே வசூலித்தது. பின்னர் பேமிலி ஆடியன்ஸிடம் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் நாளில் ரூ.2.04 கோடி வசூலித்த இப்படம் மூன்றாம் நாளில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தையே ஓரங்கட்டிவிட்டது. அதன்படி மாமன் திரைப்படம் 3ம் நாளில் ரூ.3.06 கோடி வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories