கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படங்கள் சில பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கின்றன. அது என்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதில் பிரபல நட்சத்திரங்கள் நடித்தால்தான் அது பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவிக்கும் என்பது அவசியமில்லை. வில்லன் இல்லாத பல குறைந்த பட்ஜெட் படங்களும் வெற்றிபெற்று உள்ளன. இந்த தொகுப்பில், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, நான்கு தமிழ் படங்களைப் பற்றி பார்க்க உள்ளோம். இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
25
டூரிஸ்ட் பேமிலி
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. சிம்ரன், சசிகுமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தப் படத்தை விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
35
குடும்பஸ்தன்
இயக்குனர் ராஜேஷ்வர் காளிஸ்வாமியின் 'குடும்பஸ்தன்' படத்தில் மணிகண்டன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், கோவை குருமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் 8 கோடி தான், ஆனால் இப்படம் ரூ.25 கோடி வசூலித்தது. இந்தப் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
96 பட இயக்குனர் சி.பிரேம் குமாரின் இரண்டாவது படம் 'மெய்யழகன்'. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 52.5 கோடி வசூலித்தது. இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இதுவும் ஒரு ஃபீல் குட் படமாகும்.
55
லப்பர் பந்து
இயக்குனர் தமிழ்ஹரசன் பச்சமுத்துவின் 'லவ்வர் பந்து' படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் தேவதர்ஷினி, தினேஷ், ஜென்சன் திவாகர், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.46.7 கோடி வசூலித்தது. இதை ஜியோஹாட்ஸ்டார் OTT தளத்தில் பார்க்கலாம்.