தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் விஜயகாந்த். அவரைப் போல ஒரு தங்கமான மனிதரை பார்க்க முடியாது என திரையுலகினரே வியந்து பாராட்டுவார்கள். அந்த அளவுக்கு பெயரையும், புகழையும் பெற்றிருக்கிறார் விஜயகாந்த். அவர் மறைந்தாலும் அவர் செய்த உதவிகளும், செயல்களும் காலம் கடந்து நிலைத்து நிற்கும். அப்படி விஜயகாந்த் செய்த உதவியால் முன்னேறிய ஒரு தயாரிப்பாளர் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
24
யார் இந்த தயாரிப்பாளர் டி சிவா?
அந்த தயாரிப்பாளர் பெயர் டி சிவா. இவர் அம்மா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய சொந்த ஊரில் கேமராவை வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவரின் திறமையை பார்த்த பலரும் நீ ஏன் சினிமாவுக்கு போகக் கூடாது என கேட்க, அவரும் அந்த ஆசையில் ஊரில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார். வரும்போது தன் வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயையும் எடுத்து வந்திருக்கிறார்.
34
விஜயகாந்த் படத்தால் நஷ்டம்
அவர் சென்னைக்கு வந்து விஜயகாந்திடம் கால்ஷீட் கேட்டதும் அவரும் உடனடியாக கொடுத்திருக்கிறார். அப்படி உருவான படம் தான் ‘சொல்வதெல்லாம் உண்மை’. இப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக ரேகா நடித்திருந்தார். இருப்பினும் இப்படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை. இப்படத்தால் ஒன்றரை லட்சம் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் டி சிவா, கைவசம் காசு இல்லாததால், சொந்த ஊருக்கே திரும்ப சென்று ஸ்டூடியோவில் மீண்டும் வேலை பார்த்து வந்துள்ளார்.
தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த விஜயகாந்த்
ஒரு நாள் விஜயகாந்தும் அவரது நண்பர் ராவுத்தரும் பேசிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் சிவாவின் நியாபம் வர, அவருக்கு போன் போட்டு, உடனே சென்னைக்கு கிளம்பி வரச் சொல்லி இருக்கிறார்கள். சொல்வதெல்லாம் உண்மை படத்தின் போது சிவாவின் உழைப்பை பார்த்து இம்பிரஸ் ஆன விஜயகாந்த், அவரை தங்களிடம் ஒர்கிங் பார்ட்னராக சேர்த்து தாங்கள் தயாரித்த ஒரு படத்தில் இருந்து கிடைத்த லாபத்தில் இருந்து 25 சதவீதத்தை சிவாவிடம் கொடுத்திருக்கிறார். அதன் மதிப்பு ரூ.7.5 லட்சம் இருக்குமாம். அது சிவா விஜயகாந்த் படத்தை தயாரித்து நஷ்டமடைந்ததை காட்டிலும் 7 மடங்கு அதிகம் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.