பதம் பார்க்கணும்னு சொல்றது காமெடியா...! ‘லவ் டுடே’ இயக்குனரை வெளுத்துவாங்கிய ‘கோமாளி’ பட நடிகை

Published : Dec 09, 2022, 07:30 AM IST

சினிமாவில் பெண்களை தவறாக சித்தரிப்பததை இன்னும் எவ்ளோ நாள் தான் பொறுத்துக் கொள்ள முடியும் என லவ் டுடே படத்தை கோமாளி நடிகை விமர்சித்துள்ளார்.

PREV
14
பதம் பார்க்கணும்னு சொல்றது காமெடியா...! ‘லவ் டுடே’ இயக்குனரை வெளுத்துவாங்கிய ‘கோமாளி’ பட நடிகை

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டவர் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து இவர் இயக்கிய படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி மாஸ் காட்டி இருந்தார் பிரதீப். கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் இருந்ததால், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்தது.

24

ஏஜிஎஸ் நிறுவனம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடி மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இப்படத்திற்கு அங்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படி கோலிவுட் முதல் டோலிவுட் வரை இப்படத்தை கொண்டாடினாலும், இப்படத்தில் உள்ள காமெடிகள் முகம் சுழிக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளதாக விமர்சனங்களும் ஒருபக்கம் எழுந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு தான் ஆபத்து..! திக் திக் காட்சிகளுடன் வெளியான 'கனெக்ட்' ட்ரைலர்!

34

அந்த வகையில், பிரபல ஆர்.ஜே.வும், நடிகையுமான ஆனந்தி, லவ் டுடே படத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார். லவ் டுடே படத்தில் அதிகமாக ஆண்களை மட்டுமே நல்லவர்களாக காட்டி உள்ளதாகவும், பெண்கள் மோசமானவர்கள் போல சித்தரிக்கும் வகையில் காமெடி காட்சிகள் அமைந்திருப்பதாக விமர்சித்துள்ள அவர், குறிப்பிட்ட சீனை அதற்கு உதாரணமாகவும் கூறியுள்ளார்.

44

அதன்படி லவ் டுடே படத்தில் ஹீரோயின் இவானாவின் தங்கைக்கு தவறான மெசேஜ் அனுப்பவில்லை என நிரூபித்த ஹீரோ பிரதீப் உத்தமனை நல்லவன் என ஏற்றுக்கொள்கிறார்கள். அதே படத்தில் பிரபல நடிகையை பதம் பாக்கணும் என்று அவர் சொல்லும் போது அதை காமெடி என ரசிக்கிறார்கள். சினிமாவில் பெண்களை தவறாக சித்தரிப்பததை இன்னும் எவ்ளோ நாள் தான் பொறுத்துக் கொள்ள முடியும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஆர்.ஜே.ஆனந்தி.

ஆர்.ஜே.ஆனந்தி, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படத்தில் நடிகர் யோகிபாபுவின் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மஞ்சள் நிற பட்டாம்பூச்சியாய் ரசிகர்கள் மனதை சிறகடிக்க செய்த சினேகா!

Read more Photos on
click me!

Recommended Stories