90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா. விஜய், அஜித், ஸ்ரீகாந்த், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர்... தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற பட்டாம்பூச்சி போல், தன்னுடைய மங்காத அழகில்... ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த சினேகாவின் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
கடைசியாக நடிகை சினேகா, தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த 'பட்டாஸ்' திரைப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் போதே நடித்து வந்தார். மேலும் ரிஸ்க் எடுத்து சில ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்தார்.