கோலிவுட் திரையுலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தை தனதாக்கி கொண்டுள்ள நடிகை நயன்தாரா, கடந்த ஏழு ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை, இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்... இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உள்ள கண்ணாடி மாளிகையில் வெகு சிறப்பாக நடந்தது.
திருமணமான இந்த ஆண்டே, நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், திடீரென தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர் நயன் - விக்கி ஜோடி. அதாவது இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.
திருமணமான நான்கே மாதத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவினர் தீவிர விசாரணைக்கு பின்னர், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாக உறுதி செய்தனர். மேலும் வாடகை தாய் விவகாரத்தில் இவர்கள் விதிமுறைகளையும் மீறாமல் குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி செய்த பிஅறிக்கை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நயந்தாரா, தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாராவின் கனெக்ட் படத்தின் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதில் நயன்தாராவின் கன்னங்கள் மிகவும் ஒட்டிப் போய் இது நயன்தாராவா என பலரும் அதிர்ச்சியாகும் அளவிற்கு உள்ளார். பளீச் என இருக்கும் அவரது முகமும் படு டல்லாக இருக்கிறது. இது நயன்தாராவின் மேக்கப்பின் எபெக்ட்டா அல்லது... நயன்தாராவுக்கு உடல் நிலை சரியாளாத போது எடுத்த புகைப்படங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல் இந்த புகைப்படங்களும், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் பாலியல் தொல்லை? திரையுலகை விட்டே விலகிவிடுவேன்! கீர்த்தி சுரேஷின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!