விஜயலட்சுமி என்னும் இயற்பெயரை கொண்ட இவர் வண்டிச்சக்கரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முன்னதாக மாற்றமொழி படங்களில் துணை நடிகையாக வந்துள்ளார். பின்னர் வண்டி சக்கரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதில் சாராயம் விற்கும் பெண்ணாக நடித்ததற்கு பிறகு விஜயலட்சுமி கதாபாத்திர பெயரான சில்க் என்றே அழைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு...சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !
இவர் மற்ற நடிகைகளை காட்டிலும் அதிகமாக காட்டிய கவர்ச்சியும், அவரது கிளாமர் உடைகளும் பலத்த வரவேற்பையும், இவர் குறித்த வேறு விதமான கண்ணோட்டத்தை உருவாக்கியது. தமிழில் அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், டி.ஆர், என முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார் சில்க்.