ஐடியில் பணியாற்றிய சாக்ஷி அகர்வால், மாடலிங் துறையில் ஈடுபட்டு... பின்னர் நடிகையாகவும் மாறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினியின் இளைய மருமகளாக நடித்திருந்தார். அறிமுகமே பெரிய நடிகரின் படம் என்றாலும் இவரை உலகறிய செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினர். அதே போல், பட வாய்ப்பை கை பற்ற கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாகி கொண்டார்.
புடவை, மாடர்ன் உடை, நீச்சல் உடை, அல்ட்ரா மாடர்ன் உடை என தினுசு தினுசாக உடை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் சாக்ஷி அகர்வால்.
பெரும்பாலும் நடிகைகள் ஷூட்டிங் இல்லாத போது, வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய விடுமுறையை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், சாக்ஷி அகர்வால் தன்னுடைய ஓய்வு நாட்களை கழிக்க, அமெரிக்கா சென்றுள்ளார்.
அந்த வகையில் தற்போது வேகாஸ் சிட்டியில் மையம் கொண்டுள்ள சாக்ஷி அகர்வால் கவர்ச்சி புயலாக மாறி வெரைட்டி ஹாட் போட்டோசை வெளியிட்டு வருகிறார்.
இந்த ஹாட் அண்ட் கியூட் உடையில் சாக்ஷி அகர்வாலை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்... பார்பி பொம்மை போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள்.