Ponniyin Selvan: இளவரசி உங்களின் லைவ் லோகேஷன் அனுப்புங்கோ ப்ளீஸ் ...த்ரிஷாவை கிண்டல் அடித்து கார்த்தி ட்விட்..

Published : Jul 07, 2022, 03:14 PM ISTUpdated : Jul 07, 2022, 03:17 PM IST

Ponniyin Selvan: மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில், த்ரிஷாவிடம் நடிகர் கார்த்தி வைத்த முக்கியக் கோரிக்கை ஒன்று தற்போது இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

PREV
14
Ponniyin Selvan: இளவரசி உங்களின் லைவ் லோகேஷன் அனுப்புங்கோ ப்ளீஸ் ...த்ரிஷாவை கிண்டல் அடித்து கார்த்தி ட்விட்..
ponniyin-selvan

மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படம் சோழர்களை பற்றி கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.  

 மேலும் படிக்க....நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!

24
ponniyin-selvan

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முன்னதாக, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிர்கள் பலரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.  

34
ponniyin-selvan

இந்த படத்திற்கான டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது இந்த படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. 

 மேலும் படிக்க....நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!

44
ponniyin-selvan

அந்த போஸ்டரை பார்த்து த்ரிஷாவிடம் நடிகர் கார்த்தி வைத்த முக்கியக் கோரிக்கை ஒன்று தற்போது இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. அந்த ட்விட்டரில் அவர் த்ரிஷாவிடம், ''இளவரசி உங்களின் லைவ் லோகேஷன் அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் செய்ய வேண்டும்''. என ஆதித்த கரிகாலனை குறிப்பிட்டு நகைசுவையுடன் கார்த்தி பகிர்ந்துள்ளார். மேலும், கார்த்தி இந்த படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.

 மேலும் படிக்க....நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!

Read more Photos on
click me!

Recommended Stories