ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சரிவர போகாததால், தற்போது ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவர் நடிப்பில் தற்போது லத்தி திரைப்படம் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். நந்தா மற்றும் ரமணா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.
நடிகர் விஷாலுக்கு வயது 40-ஐ கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலை முறித்துக்கொண்டனர்.
இதன்பின்னர் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார் விஷால், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் தீர்க்கமாக இருந்த விஷால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதனால் அனிஷா உடனான திருமணமும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த விஷால், திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி அப்பா, அம்மா பாக்குற பொண்ணு எனக்கு செட் ஆகுமான்னு தெரியல. நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன். இப்போ லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். விரைவில் அந்த பொண்ணு யார்னு சொல்றேன்” என கூறி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.