பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரகதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக வெளியான முதல் பார்வையின் படி போலிச் சாமியார்களுக்கு எதிரான கதைக்களமாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியாக பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஆப்பு வைக்கும் கிரண்... போன் போட்டா என்ன நடக்குது தெரியுமா?
இதற்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் விழாவில் பேசிய இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், "நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து ஆதங்கமாக பேசி இருந்தார். படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும்பாலான தொகை நடிகர்களின் சம்பளமாக போய் விடுவதாகவும் இதனால் மேக்கிங் செய்ய குறைந்த தொகை மட்டுமே கையிருப்பில் மிஞ்சுகிறது. அதனால் தான் நல்ல படம் எடுத்தாலும் அதற்கு போதிய அங்கீகாரம் கிடைத்ததில்லை என கூறியிருந்தார்.