வித்தியாசமான தோற்றத்தில்... கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் 'மஞ்ச குருவி' படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோஸ்

Published : Jul 07, 2022, 01:28 PM IST

முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லனாகவும் நடித்துள்ள கிஷோர் (kishore) தற்போது வித்தியாசமான தோற்றத்தில், கதையின் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'மஞ்ச குருவி' கிராமத்து பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
18
வித்தியாசமான தோற்றத்தில்... கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் 'மஞ்ச குருவி' படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோஸ்

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் புதிய படம் "மஞ்ச குருவி". இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி வருகிறது.
 

28

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் பெருவாரியான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்  இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.
 

38

ஆடுகளம், பொல்லாதவன், வட சென்னை, ஹரிதாஸ் போன்ற படங்களில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய கிஷோர் தான் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!
 

48

இவரை தொடர்ந்து, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

58

அதே போல் அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் இப்படத்தில் அதிரடி  வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!
 

68

சென்னை அருகே ஆர்ட் டைரக்டர் கே.எம்.நந்தகுமார் அமைத்த பிரமாண்ட செட்டில் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம் மோதும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை, ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா வடிவமைத்துள்ளார்.
 

78

வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்து, சௌந்தர்யன் இசையமைத்திருக்கும் மஞ்ச குருவி படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!
 

88

மஞ்ச குருவி படத்தின் இசையை விரைவில் வெளியிட, தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் ஏற்பாடு செய்து வருகிறார். இதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories