தொடர் வன்புணர்வு புகார்கள் மலையாள திரையுலகையே கலங்கடித்து வருகிறது. திலீப், விஜய் பாபுவை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளம் , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான நடிகர் கடந்த 4- ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பூங்காவின் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் இருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.