எழில் கொஞ்சும் அழகுடன்... பொன்னியின் செல்வனில் இளவரசி குந்தவையாக மிளிரும் திரிஷா - வைரலாகும் போஸ்டர்

Published : Jul 07, 2022, 01:10 PM IST

Ponniyin Selvan–1 : நடிகை திரிஷாவின் கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளவரசி குந்தவையாக நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

PREV
15
எழில் கொஞ்சும் அழகுடன்... பொன்னியின் செல்வனில் இளவரசி குந்தவையாக மிளிரும் திரிஷா - வைரலாகும் போஸ்டர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!

25

அந்த வகையில் கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வனில் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்கிற விவரத்தை படக்குழு வெளியிட்டு வருகிறது. முதலாவதாக நடிகர் விக்ரமின் போஸ்டரை வெளியிட்டு அவர் இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

35

இதற்கு அடுத்தபடியாக நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அவரின் குதிரை பெயர் செம்பன் என்றும் குறிப்பிட்டு, அவர் குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தனர்.

இதையும் படியுங்கள்... நாயகன் முதல் கே.ஜி.எஃப் 2 வரை... அமேசான் பிரைம் ஓடிடி-யில் உள்ள சிறந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை

45

இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அவர் இப்படத்தில் பழுவூர் ராணி நந்தினியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர் இப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!

55

இந்நிலையில், இன்று நடிகை திரிஷாவின் கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் அவர் இளவரசி குந்தவையாக நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் போஸ்டரில் எழில் கொஞ்சும் அழகுடன் தேவதைபோல் மிளிரும் நடிகை திரிஷாவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இப்படத்தின் கதைப்படி வந்தியத்தேவனின் மனைவி தான் குந்தவை. இதன்மூலம் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளது உறுதியாகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories