வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

Published : Jul 07, 2022, 03:45 PM ISTUpdated : Jul 07, 2022, 03:52 PM IST

 பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் அவர்களின் மகள் மால்டி மேரியை வரவேற்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் ஜோனஸின் சகோதரர்..

PREV
14
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!
Priyanka Chopra

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட வயதில் சிரியவரான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். நிக் அமெரிக்க புகழ் பெற்ற பாப் பாடகர் ஆவார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகள் அவ்வப்போது வெளியிடும் ஹாட் ரொமாண்டிக் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்.  இதற்கிடையே இவர்களின் விவாகரத்து குறித்து கிசுகிசு எழுவதும், பின்னர்  இந்த ஜோடிகள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாகி விட்டது. 

24
Priyanka Chopra

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்  வகையில் சமீபத்தில் அவர்களின் மகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர் நிக்-பிரியங்கா தம்பதி. 39 வயதான ப்ரியங்கா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்ட செய்தியை தன் கணவருடன் சேர்ந்து வெளியிட்டிருந்தார். அதோடு குழந்தைக்கு சம்ஸ்கிருத மொழி பெயரை சூட்டியுள்ள இவர் அந்த பெயரின் அர்த்தத்தையும் வெளியிட்டார். அதாவது பிரியங்கா தன் மகளுக்கு மல்டி மேரி என பெயர் வைத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு ...சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

34
Priyanka Chopra

இதற்கிடையே குழந்தை பிறந்த 100 நாட்கள் ஐசியூவில் வைப்பட்டிருந்ததை பதிவிட்டிருந்த நடிகை தன்னை தாயாக்கியதற்கு நிக்கிற்கு நன்றி கூறியிருந்தார். பின்னர் அப்பாவும், மகளும் தந்தையர் தினத்தை கொண்டாடிய போஸ்டுகளையும் பதிவிட்டு வாழ்த்து பெற்றார் பிரியங்கா. 

மேலும் செய்திகளுக்கு ...அடுத்த முதல்வர் இவர் தான்..சூசகமாக ட்வீட் போட்ட பார்த்திபன்!

44
Priyanka Chopra

இந்நிலையில் நிக்கின் சகோதரர் கெவின் ஜோனாஸ் மல்டி மேரி குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.  அவர் தன் பதிவில், "நிக் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியைக் கண்டார். நாங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.  குடும்பம் தங்களால் முடிந்தவரை குழந்தையுடன் ஒன்றாக அதிக நேரம் செலவிட முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு ...பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூ-வில் சிகிச்சை! மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பிரியங்கா சோப்ரா உருக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories