இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.