இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு இழைக்காதீர்கள்..! வலி... வேதனையோடு.. சந்திரமுகி பொம்மி போட்ட பழைய பதிவு!

First Published | Aug 26, 2022, 5:01 PM IST

பொதுவாக குழந்தை பெற்ற சில மாதங்களில் பல தாய்மார்களும் சந்திக்க கூட வார்த்தைகள் தான் இவை என்றாலும், மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில்... அக்கறை என்கிற பெயரில் கூறும் இவாறான வார்த்தைகள் கூட பாராமாகத்தான் தெரியும் என, தன்னுடைய இந்த பழைய பதிவு மூலம் தெரிவித்துள்ளார் பிரஹர்ஷிதா.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி', உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் பிரஹர்ஷிதா. தற்போது திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்டு செட்டில் ஆகி விட்டார். இருந்தாலும் அவ்வப்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது. 

அந்த வகையில், தன்னுடைய குழந்தையுடன் இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. மேலும் இவர் குழந்தை பிறந்த சில வாரத்தில், மன அழுத்தத்தோடு போட்ட பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: உடலில் ஏகப்பட்ட காயங்கள்... பிக்பாஸ் பிரபலத்தின் பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல் ! இருவர் அதிரடி கைது!
 

Tap to resize

இந்த பதிவில் பிரஹர்ஷிதா கூறியுள்ளதாவது ... "அனைவருக்கும் வணக்கம், என் பெயர் பிரஹர்ஷிதா. நான் உங்களின் நண்பராகவோ, தெரிந்த ஒரு நபராகவோ, மகளாகவோ, மருமகளாகவோ, மனைவியாகவோ, தங்கையாகவோ, ஒரு தாயாகவோ, இருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒரு பெண்ணாக இதை எழுதுகிறேன். மிகுந்த வலியுடனும், வேதனையுடனும், இதனை எழுதுகிறேன் நேரம் இருப்பினில் படியுங்கள்.

குழந்தை பெற்றெடுத்த சில மாதங்களாகவே மன அழுத்தம் அதிகமாகவே உள்ளது. ஆனால் அதைவிட மன அழுத்தம் உங்களின் சொற்களால். என்னுடைய இந்த 24 வயதினில், இதுவரை இவ்வாறு வலி வேற எதுவும் தரவில்லை. குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு தேவை உதவி. உங்களின் தேவையற்ற எண்ணங்களோ அல்லது வலி உண்டாக்கக்கூடிய சொற்களோ அன்று. நான் குழந்தை பெற்றெடுத்த போதிலிருந்து, இவை அனைத்தும் என்னிடம் கூறப்பட்டவை... கேட்கப்பட்டவை...

மேலும் செய்திகள்: அசர வைக்கும் 'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யா ராய்யின்... நந்தினி தோற்றம்! வைரலாகும் BTS போட்டோஸ்!
 

என் குழந்தை கொழு கொழுவென்று இருக்கும் தெரியுமா? அவ்வளவு பேர் ஆச்சரியப்பட்டார்கள். குழந்தை ஏன் அழுது தாய்ப்பால் பத்தவில்லையா?  என பிறந்த ஒரு மாதத்திலேயே கேட்டாங்க. குளிப்பாற்றவங்க தான் நல்ல மசாஜ் செய்வாங்க, உனக்கெல்லாம் அந்த வாகு வராது அவங்க  குளிப்பாட்டுனா தான் குழந்தை வளரும். அவங்கள மாதிரி மருந்து உனக்கு எப்படி தர தெரியும்?

நாங்களும் குழந்தை பெற்றிருக்கிறோம், எவ்வளவோ குழந்தைகளை பார்த்திருப்போம், எப்ப சாப்பாடு கொடுக்க போற, நாங்க எல்லாம் நாலு மாசத்துல இருந்து கஞ்சி கொடுப்போம். தாய்ப்பால் மட்டும் பத்தாது. குழந்தை வளர்வதற்கு.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா? விஜய் டிவி வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!
 

நாங்கெல்லாம் எல்லாத்துக்கும் டாக்டர் கிட்டயா போனோம்? குழந்தையை தூக்கியே வெச்சி இருக்காத ரொம்ப ஒட்டிக்கும். அப்பறம் கஷ்டப்படுவ நீ.  குழந்தைய வச்சிட்டு எவ்ளோ பேர் வேல பாக்குறாங்க.. இதுபோல் இன்னும் பல சொற்கள், பல கேள்விகள், பல விதமான அறிவுரைகள், என்னால இவற்றைக் கேட்க இயலவில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

நான் நீங்கள் அல்ல, என் சந்தர்ப்பங்கள், என் பின்னணி, நான் கற்றவை, பார்த்தவை, என் பாடங்கள் வேறு. அது உங்களுடைய வாழ்க்கை பின்னணிக்கு மிகுந்த வேறுபட்டவை, என் குடும்பமாகவே இருந்தாலும் என் உணர்ச்சிகள், எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் என் வளர்ப்பு, நான் பார்த்தவை கற்றவை இலிருந்து தான் என் உடலோ, உள்ளமோ, என் கர்ப்பமோ, என் குழந்தையோ, உங்களுடையது போன்றதன்று.

மேலும் செய்திகள்: பாறைக்கு நடுவே.. பஞ்சு மெத்தையில் படுத்தபடி ஹாய்யாக போஸ் கொடுக்கும் நயன்தாரா! கலக்கல் ஹனி மூன் போட்டோஸ்!
 

உங்கள் குடும்பத்தார் உங்களை குழந்தைக்கு தாய்ப்பால் தர விடாமலோ, உங்களின் தாய்ப்பாலின் அளவை குறைச்சல் என்றோ, நீங்கள் உங்கள் குழந்தையை குளிப்பாட்ட முடியாது என்றோ கூறி இருப்பார்கள். அல்லது குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்றோ உங்களுக்கு சொல்லி இருக்கலாம். உங்கள் வளர்ப்பை சந்தேகப்பட்டிருக்கலாம், பல தேவையற்ற எண்ணங்களை முறைகளை உங்கள் மீது திணித்திருக்கலாம். இதற்காக நான் அனுதாபப்படுகிறேன். அப்படிப்பட்ட நிலைமை உங்களுக்கு வந்திருக்கக் கூடாது, அவை உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதற்காக நான் வேதனைப்படுகிறேன் இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு பெண்ணுக்கு இழைக்காதீர்கள் உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.

என் வழியில் என் குழந்தை வளர்க்க விடுங்கள். எனக்கு தெரிந்தவையே வைத்து ஒரு தாயை விட தனது சேயின் தேவையை பூர்த்தி செய்ய வேறு யாராலும் இயலாது. உங்களிடத்தில் உதவி கேட்கும் வரை அறிவுரை என்ற பெயரில் புண்படுத்தாதீர்கள். இதுவரை என்னை புரிந்து எனக்கு உதவிய என் தாய், என் சித்தப்பா, சித்தி, என் கணவர், என் தோழி, இவர்களுக்கு என் நன்றி என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி ,இறைவனுக்கு கோடி நன்றி, என இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!
 

பொதுவாக குழந்தை பெற்ற சில மாதங்களில் பல தாய்மார்களும் சந்திக்க கூட வார்த்தைகள் தான் இவை என்றாலும், மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில்... அக்கறை என்கிற பெயரில் கூறும் இவாறான வார்த்தைகள் கூட பாராமாகத்தான் தெரியும் என, தன்னுடைய இந்த பழைய பதிவு மூலம் தெரிவித்துள்ளார் பிரஹர்ஷிதா.

Latest Videos

click me!