சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் பேரன் யாத்ரா; ரஜினி வீட்டில் நடந்த விசேஷம்! படையெடுத்த பிரபலங்கள்!

Published : Aug 28, 2024, 10:12 AM ISTUpdated : Aug 28, 2024, 10:36 AM IST

நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. லதா ரஜினிகாந்த் வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

PREV
16
சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் பேரன் யாத்ரா; ரஜினி வீட்டில் நடந்த விசேஷம்! படையெடுத்த பிரபலங்கள்!
Latha Rajinikanth House Krishna Jayanthi Celebrations

பகவான் விஷ்ணுவின் 8-வது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தார். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று முன் தினம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் களைகட்டியது.

 

26
Latha Rajinikanth House Krishna Jayanthi Celebrations

கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட நிலையில் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளை அலங்கரித்து கிருஷ்ணர் சிலை அல்லது படங்கள் அலங்கரித்து வீட்டுக்குள் கிருஷ்ணன் வருவது போல் கோலமிட்டும் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியருக்கு கிருஷ்ணர், ராதை வேடங்களை போட்டு கொண்டாடினர்.

சினிமாவில் களமிறங்கும் தனுஷின் வாரிசு.. NEEK பட முதல் சிங்கிளில் உள்ள சூப்பர் சர்ப்ரைஸ்!

 

36
Latha Rajinikanth House Krishna Jayanthi Celebrations

அந்த வகையில் இந்த லதா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். லதா வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

46
Latha Rajinikanth House Krishna Jayanthi Celebrations

சுஹாசினி மணிரத்னம், மீனா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ரஜினி மகள் ஐஸ்வர்யா உடன் சுஹாசினி எடுத்துக் கொண்ட போட்டோக்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

56
Lyricist Yatra

இதனிடையே ரஜினியின் பேரனும் தனுஷ் – ஐஸ்வர்யாவின் மகனுமான யாத்ரா சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாக உள்ளார். தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடலை அவர் எழுதி உள்ளார்.

கோலிவுட்டில் இத்தனை பெண் இசையமைப்பாளர்களா? பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

66
Aishwarya Dhanush

இதன் மூலம் தமிழ் திரையுலகில் பேரனின் எண்ட்ரியை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு ரஜினி வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories